மேலும் செய்திகள்
அமித்ஷா அருமையான பேச்சு: லோக்சபா உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு
3 hour(s) ago | 7
புதுச்சேரி : 'என்.ஆர்., காங்., கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்துதான் அ.தி.மு.க., வினர் வெற்றி பெற்றனர்' என, பா.ம.க., மாநில அமைப்பாளர் அனந்தராமன் பேசினார். இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்., வேட்பாளர் தமிழ்ச்செல்வனை ஆதரித்து, பா.ம.க., சார்பில் நேற்று மாலை நடந்த மோட்டார் சைக்கிள் பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது: இந்த இடைத் தேர்தல் மிக முக்கியமானது. எதிர்க்கட்சி வேட்பாளர்களை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். மக்களுக்காக பல நல்ல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி, ஏழரை ஆண்டு காலம் முதல்வராக இருந்த ரங்கசாமியை தூக்கி எறிந்ததால்தான் கடந்த தேர்தலில் காங்கிரசார் தோல்வி அடைந்தனர்.
ரங்கசாமியின் ஆட்சி தொடர, இடைத் தேர்தலில் அக்கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க., போராடியதன் விளைவாக தமிழகத்தில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால், புதுச்சேரியில் அளிக்கப்படவில்லை. இதனால், 20 ஆண்டுகள் கல்வி, வேலை வாய்ப்பில் பின் தங்கினோம். இங்கு, பா.ம.க., போராட்டம் நடத்தி மனு கொடுத்ததன் வாயிலாக முதல்வராக இருந்த ரங்கசாமிதான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினார். அதனால்தான், இன்று தேர்தலில் அவரது கட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம்.
என்.ஆர். காங்., கட்சி முதுகில் ஏறி சவாரி செய்துதான் அ.தி.மு.க.,வினர் வெற்றி பெற்றனர். அதனால்தான், மக்களை மறந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., ஆகினர். தங்களால் தான் என்.ஆர். காங்., கட்சி வெற்றி பெற்றது எனக் கூறும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க் களுக்கு துணிவு இருந்தால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள். தேர்தலின்போது ரங்கசாமி காலில் விழுந்துவிட்டு, தற்போது அவரது காலைவார நினைத்தால் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு அனந்தராமன் பேசினார்.
3 hour(s) ago | 7