| ADDED : மார் 04, 2024 06:04 AM
புதுச்சேரி : ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், இலவசமாக கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், கோவா மத்திய கடலோர வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, அட்டவணை பிரிவினருக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவியும் விஞ்ஞான முறையில் கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்ட 20 பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகள் மற்றும் தீவனங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் செழியன், டாக்டர் சஞ்சய் உதர்வார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.