உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மண்ணாடிப்பட்டு தொகுதியில் வைத்திலிங்கம் போட்டியிட மனு

 மண்ணாடிப்பட்டு தொகுதியில் வைத்திலிங்கம் போட்டியிட மனு

புதுச்சேரி: புதுச்சேரியில், வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள, சட்டசபை தேர்தலையொட்டி, காங்., சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து,விருப்ப மனுக்கள், கட்சி தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம், மண்ணாடிப்பட்டு தொகுதி வேட்பளாராக போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை,மாநில காங்., செயற்குழு உறுப்பினர் உதயகுமார் நேற்று தாக்கல் செய்தார். அப்போது,எஸ்.சி., - எஸ்.டி., மாநில அமைப்பாளர் சாம்பசிவம், சேகர், சகாயராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். அதே போன்று, 20க்கும் மேற்பட்டவர்கள், வைத்திலிங்கம் வேட்பாளராக போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்