உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச மனைப்பட்டா வழங்க கோரி ஊசிமணி மாலையுடன் மனு

இலவச மனைப்பட்டா வழங்க கோரி ஊசிமணி மாலையுடன் மனு

புதுச்சேரி: வில்லியனுாரில் நரிக்குறவர்கள் இலவச மனை பட்டா வழங்க கோரி, கலெக்டருக்கு ஊசிமணி மாலை அணிவித்து மனு அளித்தனர்.வில்லியனுார் மூர்த்தி நகர், கொம்பாக்கம் மற் றும் திருக்காஞ்சி பகுதி சாலையோரங்களில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக, தார்ப்பாய் கொட்டகை அமைத்து வசித்து வரும் நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார இன மக்கள், இலவச மனைப்பட்டா வழங்க கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், பழங்குடியினர் விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம் தலைமையில், 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள், நேற்று கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, அவர்கள் எடுத்து வந்த ஊசிமணி, பாசிமணிகளை கலெக்டருக்கு மாலையாக அணிவித்து, இலவச மனைப்பட்டா வழங்க கோரிக்கை வைத்தனர்.மனுவை பெற்ற கலெக்டர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை