மேலும் செய்திகள்
-பேனர்: ஜாக்பாட்
33 minutes ago
அரசு பள்ளியில் முப்பெரும் விழா
56 minutes ago
சைபர் கிரைம் கும்பல் ரூ.23 ஆயிரம் மோசடி
56 minutes ago
மின்தடை
56 minutes ago
சாலை படுமோசம்
2 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 பொதுத்தேர்வை. 14,229 மாணவர்களும், பத்தாம் வகுப்பு தேர்வை 15,093 மாணவர்களும் எழுதுகின்றனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், புதுச்சேரியில் 5,758 மாணவர்கள், 6,236 மாணவிகள் என மொத்தம் 11,994 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக புதுச்சேரியில் 31 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.காரைக்காலில் ஆண்கள் 945 மாணவர்களும், 1,290 மாணவிகள் என மொத்தம் 2,235 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 9 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாகியில் 397 மாணவர்கள், 337 மாணவிகள் 6 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். ஏனாமில் 393 மாணவ மாணவிகள் 3 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.இதனை தொடர்ந்து, மார்ச் 4ம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கிறது. இதில் புதுச்சேரியில் 31 தேர்வு மையத்தில் 6,988 மாணவ மாணவிகள், காரைக்காலில் 9 தேர்வு மையத்தில் 6,45 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.மார்ச் 26ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குகிறது. இதில், புதுச்சேரியில் 6,452 மாணவர்கள், 6,161 மாணவிகள் உட்பட 12,613 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 37 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.காரைக்காலில் 1,233 மாணவர்கள், 1,247 மாணவிகள் என 2,480 பேர் எதுகின்றனர். 12 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் மாகியில் 7 தேர்வு மையத்தில், 694 மாணவ மாணவிகளும், ஏனாமில் 508 மாணவ மாணவிகள் 3 தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது.
33 minutes ago
56 minutes ago
56 minutes ago
56 minutes ago
2 hour(s) ago