உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதுபான கடையில் மோதல் 5 பேர் மீது போலீசார் வழக்கு

மதுபான கடையில் மோதல் 5 பேர் மீது போலீசார் வழக்கு

நெட்டப்பாக்கம்: தனியார் மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் மூவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.மடுகரை ராம்ஜி நகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் 26, இவர் தனது நண்பர்களான தினகரன் 22, நிலவன் 25, ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு மடுகரையில் உள்ள தனியார் பாரில் மது அருந்தி விட்டு வெளியே வந்தனர். அப்போது அங்கிருந்த ராம்பாகத்தைச் சேர்ந்த சுகுமார் 41, ஜெகன் 30, ரஞ்சித் 36, பாலா 26, தனுஷ் 24 ஆகியோர் வழியில் நின்று கொண்டிருந்தனர்.அவர்களிடம் தினேஷ்குமார் வழிவிடுமாறு அந்த கும்பலிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகுமார் உள்ளிட்ட 5 பேரும் தினேஷ்குமார் உள்ளிட்ட மூவரை சரமரியாக தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். பலத்த காயமடைந்த மூவரும் மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின், மடுகரை போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ