உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில எல்லையில் போலீசார் தீவிர சோதனை 

மாநில எல்லையில் போலீசார் தீவிர சோதனை 

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை முன்னிட்டு கோரிமேடு எல்லையில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து, தொகுதி எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார், தேர்தல் பறக்கும் படையினர் இணைந்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி, கோரிமேடு எல்லையில் டி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார், துணை ராணுவப்படை, தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து வெளிமாநில வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கார், பைக் உள்ளிட்டவைகளில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் ஏதேனும் கொண்டு வரபடுகிறதா என தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை