முதியவர் சாவு போலீசார் விசாரணை
அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் படகு குழாம் அருகே முதியவர் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.அரியாங்குப்பம் சாமிநாயக்கன் தெருவை சேர்ந்தவர் கலைவாணி. இவரது உறவினர், நெய்வேலியை சேர்ந்த செல்வராஜ், 82; திருமணம் ஆகவில்லை. கலைவாணி வீட்டில் தங்கி, அரியாங்குப்பம் காய்கறி மார்கெட்டில், வேலை செய்து வந்தார்.குடிப்பழக்கம் உடைய செல்வராஜ் நேற்று முன்தினம் இரவு, நோணாங்குப்பம் படகு குழாம் அருகே இறந்து கிடந்தார். புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.