உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பார்சல் சர்வீஸ் மேலாளர் சாவு போலீசார் விசாரணை

பார்சல் சர்வீஸ் மேலாளர் சாவு போலீசார் விசாரணை

புதுச்சேரி: தனியார் விடுதியில் பார்சல் சர்வீஸ் கோட்ட மேலாளர் இறந்து கிடந்தது குறித்து விசாரித்து வருகின்றனர். கேரளா, திருச்சூர் சேர்ந்தவர் சித்தார்தன் மகன் சஜீத்குமார்,47; கோயம்புத்துாரில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் கோட்ட மேலாளர். கடந்த 13ம் தேதி வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக புதுச்சேரிக்கு வந்த இவர், ரெயின்போ நகரில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் அறையை காலி செய்யும் நேரமாகியும், சஜீத்குமார் வெளியே வராததால், சந்தேகமடைந்த விடுதி ஊழியர் சென்று பார்த்தபோது மயங்கி கிடந்தார். உடன் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை