உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவி தற்கொலை போலீசார் விசாரணை

மாணவி தற்கொலை போலீசார் விசாரணை

பாகூர்: கல்லுாரி மாணவி, தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன் மகள் ஜெயவர்த்தினி, 19; தனியார் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பொறியியல் கல்வி படித்து வந்தார். சிவசுப்ரமணியனுக்கு கடந்த இரண்டு வருடத்திற்கு முன், உடல் நிலை பாதித்ததால், வேலைக்கு செல்லாததால், மகளின் படிப்பிற்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதனால், ஜெயவர்த்தினி மனமுடைந்து காணப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன், ஜெயவர்த்தினி தனது குடும்பத்தினருடன், கிருமாம்பாக்கம் அருகே உள்ள நரம்பை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், கழிவறைக்கு சென்ற ஜெயவர்த்தினி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, ஜெயவர்த்தினி துப்பட்டாவால் துாக்கில் தொங்கினார். அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். அவரது தாய் ஜெகதீஸ்வரி, 45, புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை