உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளி தற்கொலை: போலீசார் விசாரணை

தொழிலாளி தற்கொலை: போலீசார் விசாரணை

பாகூர்: கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருமாம்பாக்கம் அடுத்த வண்ணாங்குளம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வீரப்பன், 36. இவருக்கு மாலதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். வீரப்பனுக்கு மது பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் காலை வீரப்பன் வேலைக்கு புறப்பட்டபோது, தனது மனைவியிடம், செலவிற்கு பணம் கேட்டார். அவர், இல்லை என, கூறி விட்டு, ஏரி வேலைக்கு சென்று விட்டார். மாலதி வேலை முடிந்து மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீரப்பன் வீட்டில் துாக்கில் தொங்கினார். அவரை மீட்டு, கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், இறந்ததை உறுதி செய்தார். மாலதி புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி