உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை 

வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை 

புதுச்சேரி : லாஸ்பேட்டை, சாந்தி நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இரண்டு மகன்கள் உள்ளனர். சரவணன் கடந்த 10 ஆண்டுளுக்கு முன் இறந்து விட்டதால், தமிழ்ச்செல்வி தனது இரு மகன்களுடன் வசித்து வந்தார். இதற்கிடையே, கூலி வேலை செய்து வரும் இவரது இரண்டாவது மகன் கவுதம், 25; தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். கவுதம் மீது லாஸ்பேட்டை, உருளையன்பேட்டை போலீசில் அடித்தடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், கடந்த 15ம் தேதி குடிபோதையில் வீட்டிற்கு வந்த கவுதமை, தாய் தமிழ்ச்செல்வி கண்டித்தார். இதனால், மனமுடைந்த கவுதம் கடந்த 15ம் தேதி வீட்டில் தனது அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை