| ADDED : ஜன 27, 2024 06:27 AM
புதுச்சேரி : லாரி மீது போலீஸ் ஜீப் மோதிய விபத்தில், மூன்று போலீசார் காயமடைந்தனர்.பாகூர் மணமேடு, பெரியார் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன், 27; ஊர்காவல்படை வீரர். கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஜீப் டிரைவாக பணிபுரிகிறார்.நேற்று முன்தினம் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலைய குற்ற வழக்கில் உள்ள நபரை காலாப்பட்டு சிறையில் இருந்து நிர்வாக ரீதியிகாக கைது செய்ய போலீஸ் ஜிப்பை ஓட்டிச் சென்றார். அவருடன் உதவி சப்இன்ஸ்பெக்டர் லுார்துநாதன், காவலர் வெங்கட்ராமன் உடன் சென்றனர்.மதியம் 12:30 மணிக்கு, இந்திரா சிக்னலில் இருந்து ராஜிவ் சிக்னல் நோக்கி ஜீப் சென்றது. ராஜிவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை அருகே முன்னால் சென்ற லாரியை டிரைவர் திடீரென பிரேக் அடித்து நிறுத்தினார். இதனால், போலீஸ் ஜீப் லாரி மீது மோதி நின்றது.இதில் உதவி சப்இன்ஸ்பெக்டருக்கு லுார்துநாதனுக்கு வலது காலிலும், கான்ஸ்டபிள் வெங்கட்ராமனுக்கு தலை, மார்பு, வலது காலிலும், ஊர்காவல்படை வீரர் விக்னேஷ்குமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது.மூவரையும் பொது மக்கள் மீட்டு, கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.