உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபர் மீது தாக்குதல் 2 பேருக்கு போலீஸ் வலை

வாலிபர் மீது தாக்குதல் 2 பேருக்கு போலீஸ் வலை

பாகூர்: பாகூரில் வாலிபரை தாக்கி, கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து இருவரை தேடி வருகின்றனர். பாகூர் திருமால் நகரை சேர்ந்தவர் அஜித்குமார் 26; கொரியர் சர்வீஸ் சூப்பர்வைசர். கடந்த 14ம் தேதி இரவு 10:00 மணியளவில், அஜித்குமார், தனது நண்பரான விஜி (எ) காளிதாஸ்சுடன், அங்குள்ள வண்ணாங்குளம் வீதியில் சிறிய வாய்க்கால் பாலத்தில் மீது அமர்ந்து கொண்டு மது அருந்தினர்.அவ்வழியாக பைக்கில் வேகமாக சென்ற நபரை பார்த்து அஜித்குமார் கத்தி கூப்பிட்டார். அந்த நபர் பைக்கை நிறுத்திய போது, பாகூரை சேர்ந்த தாமரை என்பது தெரிந்துள்ளது.அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தாமரை, அஜித்குமாரை ஆபாசமாக திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். தப்பியோடிய அஜித்குமார் அங்குள்ள வீட்டின் மாடியில் பதுங்கினார். மீண்டும் தாமரை தனது தனது நண்பர் ராஜிவுடன் அங்கு வந்தார். தாமரையை கண்டதும், மாடியில் இருந்து குதித்து அஜித்குமார் தப்பியோட முயன்றார்.அதில், அவருக்கு முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதால், கடலுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு தாமரை, ராஜி ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை