மேலும் செய்திகள்
புகையிலை பறிமுதல்
11-Oct-2025
வில்லியனுார்: வில்லியனுார் அருகே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு மாசுக்கட்டுப்பாடு குழும அதிகாரிகள் சீல் வைத்தனர். புதுச்சேரி அரசு, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், தட்டுகள் உள்ளிட்ட 15 வகையான பிளாஸ்டிக் பொருளுக்கு தடை விதித்துள்ளது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வது, விற்பது, பயன்படுத்துவது சட்டத்திற்கு எதிரானது. இந்நிலையில் நேற்று ஒதியம்பட்டு பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்வதாக மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. புதுச்சேரி மாசு கட்டுப்பாடு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் ஆலோசனையின் படி, வில்லியனுார் தாசில்தார் சேகர், வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், வி.ஏ.ஓ மணிகண்டன், புதுச்சேரி மாசுகட்டுப்பாடு குழுமத்தின் இளநிலை பொறியாளர் புகழேந்தி, உதவி அறிவியல் அதிகாரிகள் விமல்ராஜ் மற்றும் சீனுவாசன் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் ஒதியம்பட்டு பகுதியில் இயங்கி வந்த தனியார் பாலிமர் தொழிற்சாலையை ஆய்வு செய்தனர். தொழிற்சாலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யப்படுவதை கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து தொழிற்சாலையில் இருந்த ஒரு டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்து, தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.
11-Oct-2025