உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம்அரசுக்கு மா.கம்யூ., வலியுறுத்தல்

வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம்அரசுக்கு மா.கம்யூ., வலியுறுத்தல்

புதுச்சேரி:மக்களின் பொருளா தாரம், வாழ்வாதாரம் உயரும் விதமான வளர்ச்சித் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் அரசு முக் கியத்துவம் கொடுக்க வேண்டும் என மா.கம்யூ., வேண்டுகோள் விடுத்துள்ளது.மா.கம்யூ., பிரதேச செயலாளர் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கை:மாநில அரசின் தவறான கொள்கையால் விவசாயம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. இதனால் 48651 எக்டேராக இருந்த விவசாய நிலப்பரப்பு பாதி அளவுக்கு மேலாகக் குறைந்து விட்டது. விளை நிலத்தைப் பாதுகாத்திட வலுவான சட்டம் இயற்றவும், விவசாயத்தை வருமானம் உள்ள தொழிலாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதிய தொழில்களுக்கு முயற்சிகளை மேற்கொள்வது, புராதன தொழிலான கைத்தறி, சிறு மற்றும் குறுந்தொழில்களை ஊக்குவித்தல், அவர்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பஞ்சாலைகளை நவீனப்படுத்த வேண்டும். மத்திய பொதுத்துறையை மாநிலத்தில் அமைத்திட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.காலியாக உள்ள பணியிடங்களை சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப வேண்டும். மாநிலப் பணித் தேர் வாணையம் அமைத்து அதன் மூலம் அரசு உயர் அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை