உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருவாண்டார்கோவில்குளத்தை தூர் வார வலியுறுத்தல்

திருவாண்டார்கோவில்குளத்தை தூர் வார வலியுறுத்தல்

திருபுவனை:திருவாண்டார்கோவில் குளத்தை தூர் வாரி சுத்தப்படுத்த வேண்டும்.திருவண்டார்கோவில் பகுதியில் மழைக் காலங்களில் பெருக்கெடுக்கும் மழைநீர் கோவில் குளத்தில் தேங்கி, அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயர காரணமாக இருந்து வருகிறது.முக்கியத்துவம் வாய்ந்த கோவில் குளம் ஆனால் சமீபகாலங்களாக போதுமான பராமரிப்பின்றி 8 அடி ஆழத்திற்கு மண் தூர்ந்து போய்விட்டது. இதனால் குளத்தில் தண்ணீர் தேங்க வழியின்றி வெளியே வழிந்தோடி சாக்கடையில் கலந்து வீணாகிறது.தற்போது மழைக்காலம் துவங்க உள்ள சூழ்நிலையில் குளத்தை முன்கூட்டியே தூர் வாரினால் மழை நீர் வீணாவதைத் தடுத்து சேமிக்க முடியும்.தேங்கும் மழை நீரில் மீன்களை விட்டு வளர்த்தால் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு குத்தகை மூலம் வருவாய் பெருகும். நூறு நாள் திட்டத்தின் கீழ் மண்தூர்ந்து போயுள்ள திருவண்டார்கோவில் குளத்தைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை