மேலும் செய்திகள்
தேரெழுந்துார் சிவன் கோவில் கல்வெட்டுகள் படியெடுப்பு
44 minutes ago
புதுச்சேரி:தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு வரும் 24ம் தேதி நவீனா கார்டன் திருமண நிலையத்தில் நடக்கிறது. வரவேற்புக் குழு தலைவர் பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது: தாழ்த்தப்பட்ட மக்களுக்கான துணைத் திட்ட நிதியை முறையாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பயன்படுத்த வேண்டும். அருந்ததியினருக்கு அரசு ஏற்றுக் கொண்ட அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். நிலமற்ற தலித் மக்களுக்கு இலவச நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளன. சிறப்புக் கூறு நிதி தவறாகப்பயன்படுத்தப்பட்டுள்ளது மத்திய தணிக்கை அறிக்கையின் மூலம் அம்பலமாகி உள்ளது. சிறப்புக்கூறு நிதி தொடர்பான கோரிக்கை சாசனம் உருவாக்கப்பட்டு, அது மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
44 minutes ago