உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தானிய விதைகளில் ஓவியம்ஆச்சார்யா மாணவன் சாதனை

தானிய விதைகளில் ஓவியம்ஆச்சார்யா மாணவன் சாதனை

வில்லியனூர்:ஆச்சார்யா சிக்ஷா மந்திர் மாணவர், தானிய விதைகளைக் கொண்டு கண்தான விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்து சாதனை படைத்தார்.புதுச்சேரி ஆச்சார்யா சிக்ஷா மந்திர் பள்ளி 5ம் வகுப்பு மாணவர் குறளாழி. இவர் 12வது தனிநபர் உலக சாதனையாக தானிய விதைகளை வைத்து நேற்று (12ம் தேதி) காலை 7 மணிக்கு சம்பூர்ணா வித்யாலயா கலையரங்கில் மிகப் பெரிய ஓவியத்தை வரைந்தார்.கண்தான விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில், சுமார் 7 மீட்டர் நீளம், 16 மீட்டர் அகலம் கொண்ட இடத்தில் 1850 கிலோ எடை கொண்ட கொள்ளு, பட்டாணி, வெள்ளை பீன்ஸ் மற்றும் ராஜ்மா ஆகிய 4 வகை தானியங்களை உபயோகித்து இந்த ஓவியத்தை படைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ