மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
புதுச்சேரி : பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக 500 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.பொங்கல் பரிசு பொருட்களை கொள்முதல் செய்து வழங்க போதிய கால அவகாசம் இல்லாததால் கடந்தாண்டை போலவே இந்தாண்டு 500 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கோப்பிற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.கவர்னர் மாளிகை செயலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடிமைப் பொருள் வழங்கல் நுகர்வோர் விவகாரங்கள் துறை மூலமாக வழங்கப்படும் பொங்கல் சிறப்பு பொருட்களுக்கு ஈடாக 500 ரூபாய் வழங்குவது தொடர்பான கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ ரேஷன்கார்டு அல்லாத அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 10 மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பொருட்களுக்கு ஈடான தொகை 500 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இது புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 3,38,761 ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் என, கூறப்பட்டுள்ளது. எப்போது கிடைக்கும்
பொங்கல் பரிசு பணத்திற்கு நிதித் துறை நிதி ஒதுக்கி, கவர்னரும் ஒப்புதல் அளித்துள்ள போதிலும், துறை வாயிலாக கணக்கு மற்றும் கருவூலத் துறை கோப்பு செல்ல வேண்டும். இதற்கு ஒரு நாள் காலஅவகாசம் தேவைப்படும். எனவே 11ம் தேதி முதல் அவரவரர் வங்கி கணக்கில் பொங்கல் பரிசுக்கான பணம் செலுத்தப்படும் என, குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago