மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
புதுச்சேரி:முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் சென்டாக் அமைப்பிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இதற்காக தகவல் குறிப்பேட்டில் உயர்கல்வித் துறை மாற்றம் கொண்டு வந்துள்ளது.புதுச்சேரியில் மையப்படுத்த உயர்கல்வி மாணவர் சேர்க்கை அமைப்பாக சென்டாக் உள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டெக்., கலை அறிவியல், வணிகவியல், துணை மருத்துவம் உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கு சென்டாக் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற்று ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது.இதுமட்டுமின்றி, மற்றொரு பக்கம் எம்.டெக்., எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி., முதுநிலை சட்டப்படிப்புகளுக்கும் சென்டாக் மூலம் விண்ணப்பம் வழங்கி, கவுன்சிலிங் நடத்தி வருகின்றனர்.நீட் அல்லாத படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கி வரும் சென்டாக் அமைப்பு, இந்தாண்டு எம்.டெக்., எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி., முதுநிலை சட்டப்படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சென்டாக் தகவல் குறிப்பேட்டில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.உயர் கல்வித் துறை இந்த திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.எம்.டெக்., எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி., உள்ளிட் முதுநிலை படிப்புகளுக்கு புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், முதுநிலை சட்டப்படிப்புகளுக்கு அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியும் தனித்தனியே கவுன்சிலிங் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எம்.டெக்., எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி., படிப்புகளை பொருத்தவரை அரசு பொறியியல் கல்லுாரி, தனியார் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்துமே புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் எம்.சி.ஏ., லேட்ரல் என்ட்ரி படிப்பும் இக்கல்லுாரியே மேற்கொள்ள உள்ளது.கடந்த காலங்களில் காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பில் உள்ள இடங்கள் அனைத்தும் சென்டாக் மூலமே நிரப்பப்பட்டு வந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்டாக் அமைப்பிடம் இருந்து தனியாக பிரித்து, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையமே மேற்கொள்ள அனுமதி தரப்பட்டது. இதனால் மாணவர் சேர்க்கை குழப்பம் இல்லாமல் நடந்து வருகிறது.அந்த வரிசையில் தற்போது எம்.டெக்., எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி., முதுநிலை சட்ட படிப்புகளும் பிரித்து தனியாக கவுன்சிலில் நடத்த இந்தாண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, புதுச்சேரி தொழில்நுட்பம் பல்கலைக்கழகம், அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி விரைவில் தனித்தனியே மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம், கவுன்சிலிங் நடத்த உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
எம்.டெக்.,-346, மெட்ரீயல் சயின்ஸ்-10, எம்.சி.ஏ.,-195, எம்.பி.ஏ.,-315, மூன்றாண்டு சட்டப்படிப்பு-90, எல்.எல்.எம்.,-40, பி.ஜி.,டிப்ளமோ சட்டப்படிப்பு-15 என மொத்தம் 1011 இடங்களுக்கான முதுநிலை கவுன்சிலிங் பிரிந்து செல்கிறது.இந்த இடங்கள் புதுச்சேரி இட ஒதுக்கீடு-914, பிற மாநில ஒதுக்கீடு-75, அகில இந்திய ஒதுக்கீடு-12, நிறுவனங்களுக்கான ஸ்பான்சர்ஷிப் இட ஒதுக்கீடு -10 சீட்டுகள் என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடதக்கது.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago