மேலும் செய்திகள்
புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு
17-May-2025
புதுச்சேரி; பெத்துசெட்டிப்பேட்டையில் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரை மக்கள் பயன்பாட்டிற்கு வைத்தியநாதன் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.லாசுப்பேட்டை தொகுதி பெத்துசெட்டிப்பேட், செல்ல பெருமாள் பேட், நந்தா நகர் பகுதிகளில் நிலவி வரும் மின் பற்றாக்குறையைப் போக்க மின்துறை மூலம் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.அதனை மக்கள் பயன்பாட்டிற்கு வைத்தியநாதன் எம்.எல்.ஏ., நேற்று இயக்கி வைத்தார்.இதில், மின்துறை உதவிப் பொறியாளர் பாண்டியன், இளநிலைப் பொறியாளர் சுரேஷ் மற்றும் காங்., நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
17-May-2025