மேலும் செய்திகள்
பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
06-Dec-2025
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்தசேவை உற்சவம் நேற்று நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புனர்பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு பிரபந்த சேவை உற்சவம், காலை 11:00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின் சன்னதி புறப்பாடு, சாத்து முறை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
06-Dec-2025