மேலும் செய்திகள்
பராமரித்தல் மின்பிரிவு மையம் இடமாற்றம்
3 hour(s) ago
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சார்யார்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.
3 hour(s) ago