உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம் வில்லியனுாரில் இன்று சிறப்பு முகாம்

பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம் வில்லியனுாரில் இன்று சிறப்பு முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை இணைந்து வீடுகளில் சூரிய மேற்கூரை (சோலார் பேனல்) அமைப்பதற்கான விழிப்புணர்வு சிறப்பு முகாம் இன்று (5ம் தேதி) வில்லியனுாரில் நடக்கிறது. பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் மூலம் நடக்கும் இந்த முகாம் வில்லியனுார் அன்னை திருமண நிலையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடக்கிறது. இத்திட்டத்தில், வீட்டு மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க 3 கிலோ வாட்டுக்கு ரூ.78 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஐந்தாண்டிற்குள் செலுத்திய முதலீட்டை திரும்ப பெறுவதோடு, ஆண்டிற்கு 4,500 யூனிட் மின்சாரம் கிடைக்கிறது. இதில், மானியம் மட்டுமின்றி, 6 சதவீத வட்டியில் கடன் வழங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து மேலும் விபரம் பெற விரும்புவோர் 94890 80373, 94890 80374 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை