சர்வீஸ் சாலையில் சிக்கிய தனியார் பஸ்கள்
திருபுவனை : புதுச்சேரி திருபுவனை ஏரிக்கரை எதிரே குறுகிய சர்வீஸ் சலையில் இரு பஸ்கள் சிக்கிக்கொண்டதால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் மேம்பாலங்கள் அமைந்த இடங்களில் பாலத்திற்கு இரண்டு பக்கமும் சர்வீஸ் சாலைகள் அமைந்துள்ளது.ஆனால் திருபுவனை ஏரிக்கரை பகுதியில் பனைமரங்களை வெட்ட பசுமை தீர்ப்பாயம் தடை விதித்ததால் திருபுவனை மேம்பாலத்திற்கு தெற்கே ஒரு சர்வீஸ் சாலை மட்டுமே அமைக்கப்பட்டது. இந்த சர்வீஸ் சாலை குறுகிய சாலையாக இருப்பாதல் கனரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை தொடர்கதையாக உள்ளது. நேற்று காலை 8.10 மணிக்குபுதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற தனியார் பஸ்- மற்றும் எதிர் திசையில் புதுச்சேரி நோக்கி சென்ற தனியார் பொறியியல் கல்லுாரி பஸ் திருபுவனை ஏரிக்கரை சர்வீஸ் சாலையில், கடந்து செல்ல போதிய இடவசதி இல்லாமல் இரண்டு பஸ்களும் உரசி நின்றது.இது குறித்து தகவல் அறிந்த திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் திருபுவனை மற்றும் மதகடிப்பட்டில் வாகனங்களை தடுத்து நிறுத்தி மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர்.வில்லியனுார் போக்குரவத்து போலீசார் நகாய் நிறுவனத்திடம் இருந்து கிரேன் வாகனம் வரவழைத்து சர்வீஸ் சாலை்யில் சிக்கி நின்ற பஸ்களை மீட்டனர். இதனால் புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் காலை 11.05 மணிவரை 3 மணி நேரம் போக்குவரவத்து பாதிக்கப்பட்டது.