உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் கம்பெனி ஊழியர் சாவு

தனியார் கம்பெனி ஊழியர் சாவு

புதுச்சேரி: சண்முகாபுரம், வி.பி.சிங்., நகரை சேர்ந்தவர் அருள்முருகன், 47; இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனியாக வசித்து வந்தார். ரத்த அழுத்தும் உள்ளிட்ட நோய்க்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார். 3ம் தேதி அவரது அறையில் மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !