உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்; மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்; மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

திருக்கனுார் ; பி.எஸ்.பாளையம் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.விரிவுரையாளர் முருகையன் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சபாபதி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சிவக்குமார், மேலாண்மை குழு தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர்.ஜிப்மர் சுகாதார கண்காணிப்பாளர் திருமுருகன், ஓய்வு பெற்ற விரிவுரையாளர் சத்தியமூர்த்தி வாழ்த்தி பேசினர்.பட்டதாரி ஆசிரியை அமுதா தொகுத்து வழங்கினார்.தொடர்ந்து, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சுதந்திரம், ஓவிய ஆசிரியர் ரகுநாத், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர்கள் சார்லஸ் பால், நள்ளாம் கவுரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர். பட்டதாரி ஆசிரியர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை