உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறந்த மாடுகளுக்கு பரிசு வழங்கல்

சிறந்த மாடுகளுக்கு பரிசு வழங்கல்

அரியாங்குப்பம்: கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில், நடந்த கண்காட்சியில் சிறந்த முறையில் மாடுகளை பராமரித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு சாலை, பிள்ளையார்திட்டு பகுதியில், மாடுகள், கோழிகள் கண்காட்சி நடந்தது. இதில், பல வகையான மாடுகள், கோழிகள் இடம்பெற்றன.கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இணை இயக்குநர் காந்திமதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் கண்காட்சியை துவக்கி வைத்து, சிறந்த முறையில் மாடுகளை பராமரித்தவர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்டினார்.நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கால்நடை உதவி மருத்துவர் மரியா, ஊழியர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி