உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விடுதி நாள் விழாவில் மாணவிகளுக்கு பரிசளிப்பு

விடுதி நாள் விழாவில் மாணவிகளுக்கு பரிசளிப்பு

புதுச்சேரி :கிருஷ்ணா நகர் ஆதி திராவிடர் மாணவிகள் விடுதியில் நடந்த விடுதி நாள் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இயக்குனர் இளங்கோவன் பரிசு வழங்கினார்.புதுச்சேரி கிருஷ்ணா நகரில் உள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் 'விடுதி நாள் விழா' நடந்தது. விடுதி காப்பாளர் கவிதா தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை உதவி பொறியாளர் முகுந்தன் முன்னிலை வகித்தார்.விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.தொடர்ந்து, அவர் பேசுகையில், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு, கல்விக்காக அதிக நிதி ஒதுக்கி வருகிறது. அதனை சரியான முறையில் பயன்படுத்தி, மாணவிகள் படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.பின்னர், மாணவிகளின் பல்வேறு குறைகளை கேட்டு அறிந்த இயக்குனர் இளங்கோவன், முதற்கட்டமாக மாணவிகள் விடுதியில் இருந்து கல்லுாரிகளுக்கு சென்றுவர பஸ் வசதி உடனடியாக செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.இதில், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், விடுதி ஊழியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை