உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில கைப்பந்து போட்டி வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு 

மாநில கைப்பந்து போட்டி வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு 

திருக்கனுார் : வம்புப்பட்டு அப்துல்கலாம் கைப்பந்து விளையாட்டு கழகம் சார்பில், நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டு அப்துல்கலாம் கைப்பந்து விளையாட்டு கழகம் சார்பில், 3ம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.அய்யனாரப்பன் கோவில் அருகே இரண்டு நாட்கள் பகல் - இரவு நடந்த போட்டியில் புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதியை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டன. இதில், திருபுவனை அணி முதலிடம், வம்புப்பட்டு அணி இரண்டாம் இடம், மதகடிப்பட்டு அணி மூன்றாம் இடம் பிடித்தன.வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக 15, 000 ரூபாய், 2ம் பரிசாக 13,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 10000 ரூபாய் வழங்கப்பட்டது. இறுதி போட்டியில் சிறப்பாக விளையாட்டிய திருபுவனை அணிக்கு, சண்டை கோழி சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி