உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டென்னிஸ் முகாமில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

டென்னிஸ் முகாமில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

புதுச்சேரி, : ஆச்சார்யா டென்னிஸ் அகாடமியில் நடந்த சம்மர் டென்னிஸ் முகாமில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.புதுச்சேரியில், நடந்த சம்மர் டென்னிஸ் முகா மில், அமெரிக்கா டென்னிஸ் பயிற்சியாளர் மெரினா ரோட்ரிக்ஸ் மற்றும் கோயம்புத்துாரில் இருந்து வந்த பயிற்சியாளர் ஜான் கரினோ ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.இந்த பயிற்சியில், புதுச்சேரி, தமிழகத்தில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி நிறைவு விழாவில், சிறப்பு விருந்தினராக புதுச்சேரி டென்னிஸ் சங்க தலைவர் பிரதாபன், பயிற்சி பெற்ற மாணவர் சூர்யா உள்ளிட்ட சிறந்த மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.பயிற்சி முகாமை, பிரான்சிஸ் நில் ஏற்பாடு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ