உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உழவன் செயலி குறித்து செயல்முறை விளக்கம்

உழவன் செயலி குறித்து செயல்முறை விளக்கம்

புதுச்சேரி, : பனையபுரம் விவசாயிகளுக்கு உழவன் செயலி குறித்து காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியாக, விக்கிரவாண்டி குச்சிப்பாளையத்தில் ஊரக வேளாண்பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக பனையபுரம்கிராம விவசாயிகளுக்கு வேளாண் தொடர்பான செயல்முறை விளக்கம் அளித்தனர்.அதில், மாணவிகள் சீதளாதேவி, ஷர்மிதா, கலைஸ்ரீ, பிரசன்னா, மவுனிகா, கீர்த்தனா, ராகவி, பத்மஸ்ரீ செல்வம், புவனா, ஸ்வர்ணா ஆகியோர்இலைவண்ண அட்டை, வாழை தண்டில் ஊசி போடுதல், கால்நடை கொட்டகை சுகாதாரம், உழவன் செயலி, வேப்ப இலை சாறு, நிலையான கரும்பு தீவிரமடைதல், ஒருங்கிணைந்த விவசாயம் குறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ