உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவசாயிகளுக்கு ரூ.98.14 லட்சம் உற்பத்தி மானியம் வழங்கல்

விவசாயிகளுக்கு ரூ.98.14 லட்சம் உற்பத்தி மானியம் வழங்கல்

புதுச்சேரி : புதுச்சேரியில் நடப்பாண்டில் உளுந்து, மணிலா, சிறு தானிய பயிர், பருத்தி உள்ளிட்டவைகளை பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.98.14 லட்சம் உற்பத்தி மானியம் வழங்கப்பட்டுள்ளது.வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் பயிர் உற்பத்தி தொழில் நுட்ப திட்டத்தின் கீழ் நெல், மணிலா, பயறு வகைகள், சிறு தானிய பயிர்கள், கரும்பு, பருத்தி மற்றும் தீவன புல் முதலியவற்றிற்கு உற்பத்தி மானியம் வழங்கி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் உளுந்து, மணிலா, சிறு தானிய பயிர், பருத்தி பயிரிட்ட, 1,535 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ரூ.98.14 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது எண்ணெய் வித்து பயிரான எள் பயிரிட்ட, 436 விவசாயிகளுக்கு ரூ.34 லட்சத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டு விரைவில், விவசாயிகளின் வங்கி கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், பயிர் செய்துள்ள அட்டவணை இன விவசாயிகளுக்கான உரிய மானிய தொகை விரைவில் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை