உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேராசிரியர் இளங்கோவனுக்கு நற்றமிழ்ப் பாவலர் விருது

பேராசிரியர் இளங்கோவனுக்கு நற்றமிழ்ப் பாவலர் விருது

புதுச்சேரி : பேராசிரியர் இளங்கோவனுக்குதமிழ்நாடு அரசின் நற்றமிழ்ப் பாவலர் விருது வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சிமாமுனிவர்அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ளது. இதில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் இளங்கோவனுக்கு, தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் 2024ம் ஆண்டிற்கான நற்றமிழ்ப் பாவலர் விருது வழங்கப்பட்டுள்ளது.சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ் அகராதியியல் நாள் விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்சாமிநாதன்கலந்து கொண்டு முனைவர் இளங்கோவனுக்கு 'நற்றமிழ்ப் பாவலர்' விருது, ரூ. 50 ஆயிரம்,தங்கப்பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார்.நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் ராசாராமன், இயக்குநர் அருள், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர் பவானிமற்றும் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.பேராசிரியர் இளங்கோவன் இணைய ஆற்றுப்படை, மாணவராற்றுப்படை, அச்சக ஆற்றுப்படை, அரங்கேறும் சிலம்புகள், மணல்மேட்டு மழலைகள் உள்ளிட்ட மரபுக் கவிதை நுால்களை நல்ல தமிழில் எழுதியுள்ள முயற்சியைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ