போலீசாரை கண்டித்து வில்லியனுாரில் ஆர்ப்பாட்டம்
வில்லியனுார்: இருசக்கர வாகன விபத்தை, பொய் புகார் மூலம் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதை, கண்டித்து, வில்லியனுார் சப் கலெக்டர் அலுவலம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்ணாடிபட்டு தொகுதி கூனிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவர், சில நாட்களுக்கு முன், பைக்கில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதில், படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்தை, பொய் புகார் மூலம் நான்கு அப்பாவி இளைஞர்கள் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலை வழக்காக பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் மேற்கு பகுதி எஸ்.பி., சுப்ரமணியன் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், நான்கு இளைஞர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறக் கோரி நேற்று வில்லியனுார் சப் கலெக்டர் அலுவலம் அருகே புதுச்சேரி வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.