உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

திருபுவனை: திருபுவனை தொகுதி, சிலுக்காரிப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி பொறுப்பாசிரியர் மீரா வரவேற்றார். கல்வித்துறை 5ம் வட்ட பள்ளித் துணை ஆய்வாளர் புவியரசன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு சீருடை, நோட்டுப் புத்தகம், டைரி, புத்தகப் பை, சிறு தானிய உணவுகள், மற்றும் மாணவர்களுக்கு ஆங்கில திறனை வளர்க்கும் வகையில் 'மிஷன் இங்கிலீஸ்' புத்தகத்தையும் வழங்கி, பேசினார். ஆசிரியர் பாரதிராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி