உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நலத்திட்டஉதவி வழங்கல்

நலத்திட்டஉதவி வழங்கல்

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கருவுற்ற தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கருவுற்ற தாய்மார்கள் 49 பேருக்கு தலா ரூ. 18 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 8 லட்சத்து 82 ஆயிரத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கம் நலத்துறை மாணவர் விடுதி வளாகத்தில் நடந்தது.விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிக்கான உத்தரவை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ