உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுமக்கள் குறை கேட்பு முகாம் வரும் 5ம் தேதி நடக்கிறது

பொதுமக்கள் குறை கேட்பு முகாம் வரும் 5ம் தேதி நடக்கிறது

புதுச்சேரி: கலால் மற்றும் சட்டமுறை எடையளவை துறையில் பொதுமக்கள் குறை கேட்பு முகாம் வரும் 5ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து சட்டமுறை எடையளவை கட்டுப்பாட்டு அதிகாரி மாத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, புதுச்சேரி கலால் துறை மற்றும் சட்டமுறை எடையளவை அலுவலகத்தில், வரும் 5ம் தேதி பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், புதுச்சேரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிக்குள் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள கலால் மற்றும் சட்டமுறை எடையளவை அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்களது குறைகளை, அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை