உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நல்லுாரில் சாலையின் குறுக்கே பந்தல் அமைத்து பொதுமக்கள் திடீர் மறியல்

நல்லுாரில் சாலையின் குறுக்கே பந்தல் அமைத்து பொதுமக்கள் திடீர் மறியல்

3 மணி நேரம் போக்குரவத்து பாதிப்புதிருபுவனை: நல்லுார் கிராமத்தில் பொது பாதையின் குறுக்கே தனி நபர் கம்பிவேலி வேலி அமைத்ததை அகற்ற வலியுறுத்தியும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குரவத்து பாதிக்கப்பட்டது. திருபுவுனை தொகுதிக்குட்பட்ட நல்லுார்பேட் ஆதி திராவிட மக்கள் 64 குடும்பங்களுக்கு அரசு சார்பில் இலவச தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டது. இந்த தொகுப்பு வீடுகளுக்கு நல்லுார் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஐயனார் கோவில் வழியாக பொதுமக்கள் சென்று வந்தனர். இந்நிலையில் அந்த பாதையை தனி நபர் ஒருவர் பட்டா வாங்கியிருந்தார். ஆனாலும் பொதுமக்கள் தடை ஏதுமின்றி அவ்வழியே சென்றுவந்தனர். பட்டா வாங்கிய நபருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்ட முன் விரோதம் இருந்து வந்தது. பட்டா வாங்கியவர் பொது பாதையின் குறுக்கே கம்பி வேலி அமைத்தார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வேலியை அகற்ற வலியுறுத்தியும் நேற்று காலை 10.15 மணிக்கு மதகடிப்பட்டு-மடுகரை சாலையில் மாரியம்மன்கோவில் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து சாலையின் குறுக்கே டிஜிட்டல் பேனரால் பந்தல் அமைந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பகல் 1:00 மணிவரை நீடித்த போராட்டத்தால் புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், மடுகரை, பண்ருட்டி மார்க்கத்தில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பகல் 1:05 மணிக்கு மறியலை கைவிட்டு அங்கிருந்து ஊர்வலமாக சென்று பொதுமக்கள், பொது பாதை குறுக்கே போடப்பட்டிருந்த கம்பி வேலியை அகற்றிவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை