உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அந்தஸ்து கோரி போராட்டம் பொது நல அமைப்பு டில்லி பயணம்

மாநில அந்தஸ்து கோரி போராட்டம் பொது நல அமைப்பு டில்லி பயணம்

புதுச்சேரி, : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி போராட்டம் நடத்த ரயில் மூலம் டில்லி புறப்பட்ட பொது நல அமைப்பினரை நேரு எம்.எல்.ஏ., வழியனுப்பி வைத்தார்.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு தலைமையில் பொது நல அமைப்பினர், டில்லியில் வரும் 27 ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக பொதுமக்கள் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இந்நிலையில், பொது நல அமைப்புகளை சேர்ந்த 189 பேர் நேற்று காலை 9:50 மணிக்கு புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து டில்லி புறப்பட்டனர்.அவர்களை எம்.எல்.ஏ.,க்கள் நேரு, வைத்தியநாதன், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், வி.சி. முதன்மை செயலாளர் தேவ பொழிலன், மா.கம்யூ., மாநில செயலாளர் ராமச்சந்திரன், பாலசுப்ரமணியன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில தலைவர் ஸ்ரீதர், மங்கையர்செல்வன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், அமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.தொடர்ந்து, நேரு எம்.எல்.ஏ., உள்ளிட்ட 41 பேர் இன்று, சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டு செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ