மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
புதுச்சேரி : தேர்தல் பிரசாரத்திற்கு, அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படும் ஒலி பெருக்கிகள் பறிமுதல் செய்யப்படும் என, தேர்தல் அதிகாரி கூறி உள்ளார்.மாவட்டத் தேர்தல் அதிகாரி தீபக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக வாகனங்களைப் பயன்படுத்தும் வேட்பாளர்கள், மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்படி மாவட்டத் தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெற்று பயன்படுத்தி வருகிறார்கள்.இவ்வாறு அனுமதி பெற்று பயன்படுத்தப்படும் பிரசார வாகனங்களில் பொருத்தப்படும் எல்லாவிதமான ஒலி பெருக்கிகளுக்கும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் தனியாக அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்தினால், அவை அந்த வாகனத்தோடு சேர்த்து பறிமுதல் செய்யப்படுவதோடு, இந்திய தண்டனைச் சட்டப் படியும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் நடந்து வருவதால், வேட்பாளர்களோ, அவர்களின் ஆதரவாளர்களோ அல்லது அரசியல் கட்சிகளோ பள்ளித் தேர்வுகள் நடக்கும் இடங்களில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் எவ்விதமான பிரசாரத்திலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago