| ADDED : அக் 04, 2011 01:54 AM
புதுச்சேரி : திருபுவனை கூட்டுறவு நூற்பாலையை, தனியாரிடம் தாரை வார்க்கும்
முடிவைக் கைவிட வேண் டும் என, சி.ஐ.டி.யூ., வலியுறுத்தி உள்ளது.புதுச்சேரி
கூட்டுறவு நூற்பாலைத் தொழிலா ளர்கள் சங்கத் (சி.ஐ.டி.யூ.) தலைவர் குணசேகரன்
வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கியின் ரூ.32 கோடி கடனுதவியில் திருபுவனை
கூட்டுறவு நூற்பாலையை நவீனப்படுத்தி, முழு திறனோடு இயங்கும் வகையில் தொழிலா
ளர் கடுமையாக உழைத் தாலும், 10 ஆண்டு காலமாக சம்பள உயர்வின்றி, 2001ல்
அமைத்த கமிட்டியின் பரிந்துரை அடிப்படையிலேயே சம்பளம் வழங்கி
வருகின்றனர்.இதற்கிடையில், ஆலை யைத் தனியாருக்கு கொடுக்கும் திட்டம்
உள்ளதாக கூறுவதை, சி.ஐ.டி.யூ., கண்டிக்கிறது. மத்திய தொழிற்சங்கத்
தலைவர்களை அழைத்துப் பேசி, ஆலையின் பிரச்னைகளை அரசு உடனே தீர்த்து
வைக்கவும், இதன் மூலம் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவும்,
பிரதிமாதம் 7ம் தேதி சம்பளம் கிடைக்க வழி செய்யவும் அரசை கேட்டுக்
கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.