உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரி : திருநங்கைகளுக்கு முதல்வர் ரங்கசாமி ரேஷன் கார்டு வழங்கினார்.புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருநங்கைளுக்கு இதுவரை ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. இதனையறிந்த முதல்வர் ரங்கசாமி குடிமைபொருள் வழங்கல் துறை வாயிலாக கணக்கெடுத்து ரேஷன் கார்டு வழங்க உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து, 29 திருநங்கைளின் வீடுகள் அடையாளம் காணப்பட்டு, ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி முதல்வர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருநங்கைளுக்கு ரேஷன் கார்டு வழங்கிய முதல்வர் ரங்கசாமி 'விடுபட்ட மாற்று பாலினத்திற்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும் என உறுதியளித்தார்.நிகழ்ச்சியில் சபாநாயகர் சபாபதி, தியாகராஜன் எம்.எல்.ஏ., என்.ஆர் காங்.,பொது செயலாளர் பாலன், சகோதரன் அமைப்பு தலைவர் சீத்தல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை