உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி சாராயம் கடத்தியவர் கைது

புதுச்சேரி சாராயம் கடத்தியவர் கைது

நெல்லிக்குப்பம் : புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்குமாரமங்கலம் பகுதியில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கையில் பையுடன் சந்தேகபடும்படி நடந்து வந்தவரை நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது.உடன், போலீசார் வழக்குப் பதிந்து சாராயம் கடத்தி வந்த மேல்பட்டாம்பாக்கம், பி.என்.பாளையம் மணிகண்டனை,42; என்பவரை கைது செய்து 100 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ