உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அலங்கார மீன் கண்காட்சி : முதல்வர் துவக்கி வைத்தார்

அலங்கார மீன் கண்காட்சி : முதல்வர் துவக்கி வைத்தார்

புதுச்சேரி : மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அண்ணா திடலில் 3 நாள் அலங்கார மீன் கண்காட்சி மற்றும் விற்பனை அண்ணா திடலில் துவங்கியது. கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.மீன்வளத்துறை இயக்குனர் ராமலட்சுமி, உதவி இயக்குநர் இளையபெருமாள் ஆகியோர் வரவேற்றனர். அமைச்சர் பன்னீர்செல்வம், அரசு கொறடா நேரு எம்.எல். ஏ., முதல்வரின் பாராளுமன்ற செயலர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை மீன்வள சிறப்பு செயலர் மேத்யூ சாமுவேல் செய்தார். கண்காட்சி மற்றும் விற்பனை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். கண்காட்சிக்கு அனுமதி இலவசம். அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் 30 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. உணவுக்காக 6 ஸ்டால்கள் உள்ளன. சிறந்த ஸ்டால்களுக்கு இறுதி நாளான இன்று மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ