மேலும் செய்திகள்
சபரிமலை நடை இன்று அடைப்பு
35 minutes ago
பா.ஜ., தேசிய தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் நிதின்
45 minutes ago
சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
1 hour(s) ago
காரைக்கால் : காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி துவக்கப்படுமா என போராட்டக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.
இதன் அமைப்பாளர் செல்வசண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேலாகியும் காரைக்காலுக்கு முதல்வர் வரவில்லை. காரைக்காலுக்கான திட்டங்கள் குறித்த எந்தத் தகவலும் இல்லை. வளர்ச்சிக்கு குழு தலைவர் காரைக்காலுக்கு 640 கோடி ரூபாய் தேவை என அறிவித்துள்ளார். இது குறித்து அரசின் நிலை என்ன என்று தெரியவில்லை. காரைக்காலுக்கு அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி திட்டம் கானல் நீராகிவிடும்போல் உள்ளது. எம்.எல்.ஏ., ஒருவர் தனியார் மருத்துவ கல்லூரி கொண்டு வர சில தனியாரிடம் பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தனியார் மருத்துவ கல்லூரி இருந்தும் எந்தப் பயனும் இல்லை. இந்நிலையில் மற்றொரு மருத்துவ கல்லூரி தேவையா? அரசு அறிவித்த மருத்துவக் கல்லூரி என்ன ஆனது என்று தெரியவில்லை. இங்கு எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைக்கும் அரசு, இப்பகுதியை ஏன் தனி யூனியன் பிரதேசமாக்க கூடாது.அமைச்சர்களுக்கு காரைக்கால் வர நேரமில்லை. காரைக்காலை நிர்வகிக்க முடியவில்லையென்றால் மேற்கு வங்கம், கூர்க்கா பகுதியைத் தனி நிர்வாக அமைப்பாக உருவாக்க ஒப்புதல் அளித்தது போல் காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
35 minutes ago
45 minutes ago
1 hour(s) ago