உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.எஸ்.எஸ்.,செயல்பாடு லட்சுமிநாராயணன் பெருமிதம்

என்.எஸ்.எஸ்.,செயல்பாடு லட்சுமிநாராயணன் பெருமிதம்

புதுச்சேரி : 'புகழ் பெறுவதற்கும் தேர்தலில் ஓட்டுகளைப் பெறவும் சமூக சேவை செய்கின்றனர்' என, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., பேசினார்.முத்தியால்பேட்டை கணேஷ் நகரில், பாரதிதாசன் மகளிர் கல்லூரியின் நான்கு நாள் என்.எஸ்.எஸ்., முகாமைத் துவக்கி வைத்து, அவர் பேசியதாவது:இந்தியாவில் உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது.100ல் 15 பேர்கூட உயர் கல்விக்கு செல்வதில்லை. கல்வி அனைவருக்கும் சுலபமாகக் கிடைக்க வேண்டும் என அரசு முடிவு எடுத்தும், அப்படிப்பட்ட சூழல் இன்னும் எட்டப்படவில்லை. இந்நிலையிலும், கல்வியில் பெண்கள் அதிகளவில் சாதிக்கின்றனர். தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். வாழ்க்கையில் நேரிடும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் என்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் அமைகின்றன.

சேவை மனப்பான்மை உருவாவதற்கும் பெருகுவதற்கும் என்.எஸ்.எஸ்., தூண்டுதலாக உள்ளது.இன்றைய சூழ்நிலையில், சமூக சேவை என்பது வேறு திசையில் போய்க்கொண்டுள்ளது. தனிப்பட்ட ஒருவர் புகழ் பெறுவதற்கும், தேர்தலில் ஓட்டுகளைப் பெறவும், சமூக சேவை செய்கின்றனர். எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் உதவி செய்வதுதான் சமூக சேவை. சமுதாய அக்கறையை அனைவரிடத்திலும் ஏற்படுத்த என்.எஸ்.எஸ்.சின் செயல்பாடு உதவுகிறது. இவ்வாறு லட்சுமிநாராயணன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை