உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சதானா நகரில் அடிப்படை வசதி: சபாநாயகரிடம் கோரிக்கை மனு

சதானா நகரில் அடிப்படை வசதி: சபாநாயகரிடம் கோரிக்கை மனு

புதுச்சேரி : சுதானா நகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும் என, நல்வாழ்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சுதானா நகர் நல்வாழ்வு சங்க நிர்வாகிகள், சபாநாயகர் சபாபதியிடம் அளித்த கோரிக்கை மனு: முருங்கப்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீரை முருங்கப்பாக்கம் நடுநிலைப் பள்ளி, அரவிந்தர் நகர் வழியாக வெளியேற்றும் விதமாக கட்டப்படும் வாய்க்கால் பணி, அரவிந்தர் நகர் வீதியில் 250 மீட்டர் தூரத்திற்கு முழுமை பெறாமல் உள்ளதை விரைந்து முடிக்க வேண்டும். விவேகானந்தர் வீதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியை உடனடியாக துவக்க வேண்டும். பாவாணர் வீதியில் தற்போது தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள குறுக்கு சந்தில் சாலை அமைக்கும் முன் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும். சுதானா நகரில் பாதாள சாக்கடை, சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் இல்லாத வீதிகளில் அவ்வசதிகளைச் செய்து தர அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை