உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அ.தி.மு.க.,- என்.ஆர்.காங்., வாக்குவாதம்

அ.தி.மு.க.,- என்.ஆர்.காங்., வாக்குவாதம்

புதுச்சேரி : அ.தி.மு.க.,-என்.ஆர். காங்., எம்.எல்.ஏ.,க்கள் இடையே காரசார வாக்குவாதம் நடந்தது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஓம்சக்தி சேகர், பாஸ்கர் ஆகியோர் பேசியபோது, கவர்னரை விமர்சித்து சில வார்த்தைகளைக் கூறினர். இதற்கு, ஆளும் கட்சியைச் சேர்ந்த என்.ஆர். காங்., எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், 5 நிமிடம் சபையில் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.கவர்னரை விமர்சித்து பேசிய வார்த்தைகளை, அவைக் குறிப்பிலிருந்து நீக்க, சபாநாயகர் சபாபதி உத்தரவிட்டார். இதையடுத்து சபையில் அமைதி திரும்பி, விவாதம் தொடர்ந்து நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை